மட்டக்களப்பில் மாபெரும் வைத்திய முகாம்

மட்டக்களப்பு நூற்றாண்டு நட்சத்திரங்கள் லயன்ஸ் கழகம்,  ஹோமாக லயன்ஸ் கழகத்துடன் இணைந்து மாபெரும் இலவச மருத்துவ முகாமை இன்றை இன்று சனிக்கிழமை காலை நடாத்தியது.

மட்டக்களப்பு மாமாங்கம் மாமாங்கேஸ்வரர் வித்தியாலயத்தில் இந்த மருத்துவ முகாம் நடைபெற்றது.

மட்டக்களப்பு நூற்றாண்டு நட்சத்திரங்கள் லயன்ஸ் கழகத்தின் தலைவர் லயன் இரா.பஞ்சாமிர்தம் தலைமையில் நடைபெற்ற இந்த மருத்துவமுகாம் ஆரம்ப நிகழ்வில் லயன்ஸ் கழக மாவட்ட ஆளுனர் அசேல கருணாரட்ன உட்பட லயன்ஸ் கழகங்களின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

இந்த இலவசமாக மூக்கு கண்ணாடிகள், இலவசமாக சகல நோய்களுக்குமான மருந்துகள், சர்க்கரை நோய்க்கான சிகிச்சைகள், பெண்களுக்கான மார்புப் புற்றுநோய்ப் பரிசோதனை, சிறுவர்கள் மற்றும் வளர்ந்தோருக்கான பல்ச் சிகிச்சை, குடும்பநலம் மற்றும் குடும்பத் திட்டமிடல், சத்துணவு நிகழ்ச்சித் திட்டங்கள் போன்ற பல்வேறு சுகாதார மற்றும் ஆரோக்கிய சேவைகள் பல சிறந்த வைத்தியர்களால் இலவசமாக வழங்கப்பட்டன.

அத்துடன் தெரிவுசெய்யப்பட்ட கர்ப்பிணிப்பெண்கள் 25பேருக்கான போசனை உலர் உணவுப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டதுடன் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டன.

மாமாங்கேஸ்வரர் வித்தியாலயத்தில் நடைபெறும் இந்த மருத்துவமுகாமில் 12 கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு சிகிச்சைகளையும் பரிசோதனைகளையும் மேற்கொண்டனர்.

இந்த இலவச மருத்துவமுகாமினை நடாத்துவதற்கு ஹோமாக லயன்ஸ் கழகம் 10 இலட்சம் ரூபாவினை ஒதுக்கீடுசெய்துள்ளது.

இந்த நிகழ்வின்போது வவுணதீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட 10 மாணவர்களுக்கு சேமிப்பு புத்தகங்களும் வழங்கிவைக்கப்பட்டன.