இலங்கையின் வட பிராந்தியத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்த
பங்காண்மைகளின் கொண்டாட்டம் மற்றும் கண்காட்சி மட்டக்களப்பில் ஒக்டோபர் 19ம் திகதி
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் சுற்றுலா விடுதியில்
நடைபெற்றது.
இலங்கையின் வடக்கு கிழக்கின் மட்டக்களப்பு அம்பாறை, வடக்கின்
மன்னார், வவுனியா மற்றும் புத்தளம், மொனராகலை, அனுராதபுரம்
ஆகிய 7 மாவட்டங்களில் 60 மில்லியன் யூரோக்கள் நிதியுதவியில் முன்னெடுக்கப்பட்ட
மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்துக்கான ஐரோப்பிய ஒன்றிய உதவி
நிகழ்ச்சித்திட்டத்தின் இறுதி நிகழ்வாக இன் நிகழ்வு அமைந்திருந்தது.
இலங்கையின் வறுமைச் சமூகங்களில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள்
மேம்படுத்தல் மற்றும் உள்ளுர் பொருளாதாரங்களுக்கு அனுகூலங்களை பெற்றுக்கொடுக்கும்
வகையில் முன்னெடுக்கப்பட்டிருந்த செயற்பாடுகள் இந்த கண்காட்சியில் உள்ளடக்கப்பட்டிருந்தன.
ஐந்து ஐக்கிய நாடுகள் அமைப்புகளான யு.என்.டி.பி, யுனிசெப்,
யுனொப்ஸ், எப்.ஏ.ஓ. எனப்படும் உலக விவசாய ஸ்தாபனம், ஐ.எல்.ஓ. ஆகியவற்றுடன், ஐ.எப்.சி. எனப்படும் சர்வதேச
நிதிக்கூட்டுத்தாபனம் ஆகிய நிறுவனங்களமாவட்ட அபிவிருத்தி
நிகழ்ச்சித்திட்டத்துக்கான ஐரோப்பிய ஒன்றிய உதவி நிகழ்ச்சித்திட்டத்தை
நடைமுறைப்படுத்தியிருந்தன.
இந்த கண்காட்சியை ஐரோப்பிய ஒன்றியத்தின் பேச்சாளர் கலாநிதி ஓலாஃவ்
ஹைடில்பாக் மட்டக்களப்பு மாவட்ட உதவி மாவட்டச் செயலாளர் ஏ.நவேஸ்வரன், மாவட்ட
திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர்.
இலங்கையின் மட்டக்களப்பு, மன்னார், வவுனியா,
அம்பாறை, மொனராகலை, அனுராதபுரம் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களின் அரை மில்லியனுக்கும்
அதிகமான பயனாளிகளை உள்வாங்கி மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்துக்கான
ஐரோப்பிய ஒன்றிய உதவி முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
கிழக்கு மாகாணத்தில், யு.என்.டிபி. நிறுவனம் அரசாங்க நிறுவனங்களுடன் கைகோர்த்து, விரிவான “மாவட்ட
அபிவிருத்தி திட்டங்கள்” வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை
மாவட்டங்களின் வரவு செலவுத்திட்டம் மற்றும் தேவைகளை வினைத்திறனான முறையில் திட்டமிட
உதவும். மேலும், வருமானம் ஏற்படுத்தல் நடவடிக்கைகள் மற்றும் உற்பத்தித்திறன் வாய்ந்த
உட்கட்டமைப்பை ஊக்குவித்தல் ஆகியவற்றுக்கு உதவுவதனூடாக, மக்களுக்கு
சிறந்த வாழ்க்கைத்தரங்களை ஏற்படுத்திக்கொடுப்பது இலக்காக அமைந்துள்ளது.
யுனிசெப் 18000 க்கும் அதிகமான குழந்தைகளுக்கு தரமான கல்வியை
பெற்றுக்கொள்வதற்கு உதவும் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது. அத்துடன், தரமான
நீர், கழிவறை மற்றும் சுகாதாரபராமரிப்பு வசதிகள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு
சேவைகள் போன்றவற்றை பெற்றுக்கொடுத்திருந்ததனூடாக 200,000 மக்கள் பயன்பெறுவார்கள்.
மட்டக்களப்பில் யுனொப்ஸ் நிறுவனத்தினால் ஒன்றிணைந்த திண்மக்கழிவு
முகாமைத்துவ கட்டமைப்பு நிறுவப்பட்டிருந்தது. இதனை உள்ளுராட்சி அமைப்புகள்
நிர்வகிக்கின்றன. புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கழிவு முகாமைத்துவ வசதிகளுக்கு
மேலதிகமாக, உள்ளுராட்சி சபைகளினால் 400,000க்கும் அதிகமான மக்களுக்கு வினைத்திறன்
வாய்ந்த கழிவு முகாமைத்துவ சேவைகளை பெற்றுக்கொடுப்பதற்கான திறன்
ஏற்படுத்தப்பட்டுள்ளது. கழிவு சுழற்சியின் போது, சிறு
வியாபாரங்களுக்கு வருமானமீட்டிக்கொள்ளக்கூடிய வசதிகளும் இந்த உதவித்திட்டத்தில்
முக்கிய அங்கம் வகிக்கிறது.
உலக விவசாய ஸ்தாபனம் 22,000 மக்களுக்கு விவசாயம், கால்நடை
மற்றும் மீன்பிடி போன்ற பொருளாதார செயற்பாடுகளுக்கு பங்களிப்பு வழங்கி, வருமானத்தை
ஏற்படுத்திக்கொள்ளும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. நிலைபேறான விவசாயம், வருமான
மூலங்களின் பல்வகைமை, தொழில் வாய்ப்புகள் மற்றும் தொழில்முயற்சியாண்மை மற்றும் இயற்கை
வளங்கள் போன்றவற்றினூடாக பின்தங்கிய சமூகங்கள் அனுகூலம் பெறுகின்றன.
இதில், கிழக்கு மாகாணத்தில் 30 விவசாயக்குளங்கள்
மறுசீரமைக்கப்பட்டிருந்ததுடன், குளங்களை பாதுகாப்பாக பேண வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து
சமூகத்தாருக்கு விளக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், கரடியனாறு
விவசாய சேவை பயிற்சி நிலையத்தை வலுப்படுத்துவது போன்ற முக்கியமான செயற்பாடுகளும்
மேற்கொள்ளப்பட்டுள்ளன. 82 மில்லியன் யூரோக்கள் நிதி உதவியில் இந்த நிலையம்
மீளநிர்மாணிக்கப்பட்டிருந்தது. மேலும், இலங்கையின் முதலாவது பல்வகை கடல் மீன்
குஞ்சுகள் பொறிப்பகம் மட்டக்களப்பில் நிறுவப்பட்டிருந்தது என்பதும்
குறிப்பிடத்தக்கதாகும்
சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனமானது
இளையோருக்கு தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பதில் உதவிகளை வழங்கும்
வகையில் கிழக்கு பிராந்தியத்தைச் சேர்ந்த வௌ;வேறு தொழிற்பயிற்சி
நிலையங்களுடன் கைகோர்த்து, 1600க்கும் அதிகமான இளைஞர்களுக்கு விருந்தோம்பல், பார
சாதனங்கள் கையாளல், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், வெல்டிங்,
ஓஃவ்செட் பிரின்டிங், நிர்மாண வளாக மேற்பார்வை மற்றும் இதர நிர்மாண வியாபாரங்கள் போன்ற
அதிகளவு கேள்வி காணப்படும் கற்கைகளுக்குஊடாக பயிற்சிகள் வழங்கியுள்ளது.