ஈழத்து திருச்செந்தூரில் கந்த ஷஸ்டி ஆரம்பம்

கந்த ஷஸ்டி விரதம் இன்று ஆரம்பமாகும்.சூரபத்மனை வதம் செய்த முருகப்பெருமானை நினைத்து இந்து அடியார்கள் இந்த விரதத்தினை அனுஸ்டிக்கின்றனர்.

கந்த ஷஸ்டி விரதம் இன்று வெள்ளிக்கிழமை நாடளாவிய ரீதியில் உள்ள ஆலயங்களில் அனுஸ்டிக்கப்படுகின்றது.

ஈழத்து திருச்செந்தூர் எனப்போற்றப்படும் மட்டக்களப்பு,கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் கந்த ஷஸ்டி விரதம் சிறப்பான முறையில் அனுஸ்டிக்கப்பட்டது.

இன்று காலை விசேட யாகம் மற்றும் அபிசேக அலங்காரங்கள் நடைபெற்று முருகப்பெருமானுக்கு விசேட கும்பம் வைக்கப்பட்டு ”ஜைகள் நடைபெற்றன.

அதனைத்தொடர்ந்து அடியார்கள் கும்பத்திற்கு மலர் சொறிந்து வழிபாடுகள் செய்யும் நிகழ்வுகள் நடைபெற்றதுடன் கந்த புராண படலம் பாடும் நிகழ்வும் நடைபெற்றது.

ஆறு தினங்கள் நடைபெறவுள்ள இந்த கந்த ஷஸ்டி விரதத்தில் எதிர்வரும் 26ஆம் திகதி சூரசம்ஹார நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெறவுள்ளது.