குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டு கடுமையான தண்டனை வழங்கவேண்டும் -வியாழேந்திரன் எம்.பி.

வித்தியாவின் படுகொலையினை மிக விரைவாக கண்டுபிடித்து தண்டனை வழங்கியதுபோன்று ஏறா{ர் இரட்டைக்கொலை தொடர்பிலும் குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டு கடுமையான தண்டனைகள் வழங்கப்படவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமுன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு ஏறா{ர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சவுக்கடி பகுதியில் தாயும் மகனும் அடித்துக்கொலைசெய்யப்பட்ட சம்பவத்தினை கண்டித்தும் உயிரிழந்த மாணவனுக்கு நீதிவேண்டியும் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை காலை முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த படுகொலையினைக்கண்டித்துமன் கொலையாளிகளை விரைவாக கைதுசெய்து சட்டத்தின் முன்பாக நிறுத்தக்கோரியும் ஆறுமுகத்தான்குடியிருப்பு கலைமகள் மகா வித்தியாலய மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்கள்,பெற்றோர்,பாடசாலை சமூகம்,கிராம அபிவிருத்தி சங்கங்கள் இணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தினை நடாத்தினர்.

பாடசாலைக்கு முன்பாக ஒன்றுதிரண்ட மாணவர்கள்,பெற்றோர்,பழைய மாணவர்கள்,ஆசிரியர்கள் பாடசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமனற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரனும் கலந்துகொண்டு கொலைக்கு கண்டத்தினை தெரிவித்ததுடன் கொலையாளிகள் கைதுசெய்யப்படவேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

இங்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,

ஏறாவூர்ப்பற்று பிரதேசத்தில் தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் இரட்டைக்கொலைகள் சர்வசாதாரணமாக இடம்பெற்றுவருகின்றது.

தீபாவளி தினத்தன்று சவுக்கடி பிரதேச மக்கள் ஆவலுடன் தீபாவளியை வரவேற்க காத்திருந்தபோது மக்கள் செறிந்துவாழும் பகுதிக்குள் வீட்டுக்குள் மேல் பகுதியாக புகுந்து மிலேச்சத்தனமாக தாயையும் மகனையும் அடித்துக்கொலைசெய்துள்ளனர்.

இந்த கொலையினை செய்தவர்கள்யாராக இருந்தாலும் அவர்கள் கைதுசெய்யப்பட்டு கடுமையான தண்டனைகள் வழங்கப்படவேண்டும்.இந்த கொலை சூத்திரதாரிகளுக்கு உடந்தையாக இருந்தவர்களும் கைதுசெய்யப்படவேண்டும்.