இளைஞர்கள் நீங்கள் ஒத்துழைத்தால் நிச்சயமாக இந்தப் பிரதேசத்தில் மிக குறுகிய காலத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.







இளம் தலைவர்களாகிய,  இளைஞர்கள் நீங்கள் ஒத்துழைத்தால் இந்தப் பிரதேசத்தில் மிக குறுகிய காலத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த முடியும், என வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.ரி நஸீர் வேண்டுகோள் விடுத்தார்.


தேசிய இளைஞர் சேவைகள் மன்றம்   No drugs நாம் Youth.  " போதைப் பொருளற்ற நாடு " எனும் தொனிப்பொருளில் இளைஞர் போதைத் தடுப்பு சமூகநல விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை நாடளாவிய ரீதியில் முன்னெடுத்து வருகின்றன.

அதன் அடிப்படையில்  500 வேலைத்திட்டம் 5000 இளைஞர் யுவதிகளை தெளிவூட்டும் வேலைத்திட்டத்திற்கு ஏற்ப மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில், அதன் தலைவர் ரி.விமல்ராஷ் தலைமையில் பிரதேச இளைஞர் சேவை அதிகாரியின் ஒருங்கிணைப்பில்  கடந்த ஞாயிற்றுக்கிழமை  ( 29.10.2017) வவுணதீவு பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய
வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.ரி நஸீர், இந்த வேண்டுகோளை விடுத்தார்.

பொலிஸ் பொறுப்பதிகாரி தொடர்ந்து உரையாற்றுகையில் இந்த பிரதேசத்தின் வளர்ச்சிக்காக இளைஞர்களாகிய நீங்கள் மற்றும் பொலிஸார் இணைந்து கூட்டாக செயற்பட வேண்டிய மிகமுக்கியமான தேவைப்பாடுடைய தருணமிது,

 அதிகரித்து செல்லும் குடும்ப பிரிவு வீட்டு வன்முறை வீதி விபத்துக்களுக்கு காரணம் என்ன?

இளைஞர்களே நீங்கள் சிந்திக்க வேண்டும் சட்டவிரோத மது விற்பனை இன்று அதிகரித்துள்ளது இதனை கட்டுப்படுத்துவதற்கு உங்களது ஒத்துழைப்பு மிக அவசியமானது, இந்தப் பிரதேசத்தில் அரைமணி நேரத்தில் சென்றடைய வேண்டிய இடங்களுக்கு ஒன்றரை மணித்தியாலயம் எடுக்கின்றது அதனாலும் நாங்கள் செல்வதற்கிடையில் சந்தேக நபர்கள் சுதாகரித்துக்கொள்கின்றனர்.

பொருளாதர முன்னேற்றத்திலும் கல்வி துறை வளர்ச்சியிலும் நாம் பின்னிற்கிறோம் , இளைஞர்களே இந்த மண்முனை மேற்கு பிரதேசத்தில் அனைத்து துறைகளிலும் பாடசாலை ஆசிரியர்கள் பிரதேச செயலகம் என  கடமைபுரிகின்ற அரச உத்தியோகஸ்தர்கள் 90வீதமானவர்கள் வெளி பிரதேசங்களை சேர்ந்தவர்கள். இந்த விடயத்தில் எப்போது நீங்கள் மாற்றத்தை ஏற்படுத்தப் போகுன்றீர்கள்?
என அவர் தனது உரையினை ஆற்றினார்.


 மண்முனை மேற்கு,  மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர்                   வி. விஜயகுமார், ஈச்சந்தீவு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய பிரதம குருக்கள் இரா அருளானந்தம் குருக்கள் ஆகியோருடன்,

 இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி திருமதி நிசாந்தி அருள்மொழி,
மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் நிஸ்கோ கூட்டுறவு சங்கத்தின் முகாமையாளர் சா.கிருபைராசா,

மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் அபிவிருத்தி ஆலோசனை செயற்குழு நிருவாகிகளான எம்.அருணன் எஸ். சுசி தி.தயாநிதி, வவுணதீவு அபிவிருத்தி நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் K.சதீஸ்குமார்,இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வி அ.தர்ஷிக்கா  ஆகியோர் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.