மட்டக்களப்பு சிறைச்சாலை அதிகாரிகளின் இரத்ததான முகாம்

(லியோன்)

உதிரம் கொடுத்து உயிர்காக்கும் உன்னத பணியில் இணைந்துகொள்  எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு  சிறைச்சாலை அதிகாரிகளின்   ஏற்பாட்டில் சிறைச்சாலை மாபெரும் இரத்ததான முகாம் இன்று மட்டக்களப்பில்  நடைபெற்றது .


மட்டக்களப்பு சிறைச்சாலை அதிகாரிகளினால் பல  சமூக பணிகளை முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்தவங்கியில் நிலவும் இரத்தப்பற்றாக்குறையை நிவர்த்திசெய்யும் வகையில்  வைத்தியசாலை அதிகாரிகளினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க இந்த இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .

மட்டக்களப்பு சிறைச்சாலையில்  பிரதம  ஜெயிலர்  என் .பிரபாகரன் ஒழுங்கமைப்பில் சிறைச்சாலை அத்தியட்சகர் கே .எம் . யு , எச் . அக்பர்  தலைமையில் இன்று காலை  10.00  மணி முதல் நண்பகல் 01.00 மணிவரை இந்த இரத்ததான முகாம் நடாத்தப்பட்டது


மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் தலைமையில் நடைபெற்ற  நிகழ்வில்   மட்டக்களப்பு சிறைச்சாலை நலன்புரி சங்க உத்தியோகத்தர்கள் , சிறைச்சாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை  இரத்தவங்கி பிரிவு வைத்தியர் மனோ கிரிசாந்தன் மற்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் ,  
வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்கள் , கைதிகளின் உறவினர்கள் கலந்துகொண்டனர் .