நஞ்சு தன்மையுள்ள விலங்குகள் கடிப்பதையும் ,கொட்டுவதையும் தடுத்தல் விழிப்புணர்வு கருத்தரங்கு

(லியோன்)

தேசிய  நஞ்சு தடுப்பு வாரத்தை முன்னிட்டு “ நஞ்சு தன்மையுள்ள விலங்குகள் கடிப்பதையும் ,கொட்டுவதையும் தடுத்தல் ‘ எனும் தொனிப்பொருளில் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு மட்டக்களப்பில் நடைபெற்றது
 

தேசிய நஞ்சு தடுப்பு வாரமானது தேசிய நஞ்சுகள் தகவல்கள் மையத்தினால் நாடளாவிய ரீதியில் தேசிய சுகாதார நிகழ்ச்சி திட்டத்த்தின் கீழ் பல்வேறுபட்ட நஞ்சாதல் மற்றும் அவற்குக்கான சிகிட்சைகள் தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன .

இதன் கீழ் கிழக்கு பல்கலைக்கழக பொது மருத்துவ பீடத்தின் ஏற்பாட்டில் நஞ்சு தன்மையுள்ள விலங்குகள் கடிப்பதையும் ,கொட்டுவதையும் தடுத்தல் தொடர்பான நிகழ்வு மட்டக்களப்பு  கிழக்கு பல்கலைக்கழக பொது மருத்துவ பீட மண்டபத்தில் நடைபெற்றது .

இலங்கை உலகிலேயே அதிவிகிதாசாரத்தை கொண்ட நாடுகளில் ஒன்றாக இருக்கின்றது கூடிய பாம்புக் கடியின் வருடாந்தம் 33000 விஷப்பாம்புக் கடிக்காளானவர்கள் அரசாங்க வைத்தியசாலைகளில் பதிவாகின்றனர் ,

இலங்கையில் இடம்பெறுகின்ற 27 வீதம் பாம்புக்கடிகளில் 95வீதம் மரணத்தை ஏற்படுத்துக் கூடியவகையாக அமைவது நாகம் .
,கண்ணாடி விரியன் ,காட்டு விரியன் , எண்ணெய் விரியன் , என்பவற்றினால் ஏற்படுகின்றது .

2015 ஆம் ஆண்டின் மருத்துவ புள்ளி விபரங்களின்  பிரகாரம் 36631 பாம்புக் கடிகுள்ளானவர்கள் வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் 78 பேர் மரணமடைத்துள்ளனர் .

மிக அதிகமான பாம்புக் கடிகள் பதிவாயுள்ள மாவட்டங்களாக ,குருநாகல் ,புத்தளம் , பொலன்னறுவை ,பதுளை , மொனராகலை ,இரத்தினபுரி ,கேகாலை ஆகிய மாவட்டங்கள் குறுப்பிடத்தக்கது 


இந்த கருத்தரங்கில் வளவாலர்களாக கிழக்கு பல்கலைக்கழக விலங்கியல் பேராசிரியர் வைத்தியர்  வி . வினோ பாபா ,  பொது மருத்துவ விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் எம் உமா காந்த் ஆகியோர் கலந்துகொண்டனர்