பாலமீன்மடு - திராய்மடு மீனவ சங்கத்தினால் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும்

(லியோன்)

ஒருவருட பூர்த்தியை முன்னிட்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் சங்கத்தின் வருட கணக்கறிக்கை சமர்பிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு   பாலமீன்மடுவில் நடைபெற்றது  


மட்டக்களப்பு   பாலமீன்மடு மற்றும் திராய்மடு   மீனவ  சங்கத்தின் ஒருவருட பூர்த்தியை முன்னிட்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் சங்கத்தின் வருட கணக்கறிக்கை சமர்பிக்கும் நிகழ்வு  மீனவ சங்க தலைவர் ஞா .சுரேஷ் தலைமையில் பாலமீன் மடு விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் இன்று  நடைபெற்றது .

பாலமீன்மடு மற்றும் திராய்மடு  மீனவ சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் மீன்பிடி தொழிலை வாழ்வாதார தொழிலாக செய்யும் மீனவ குடும்ப மாணவர்களில்  தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிந்தியடைந்த மாணவர்களையும் , மீனவ குடும்பங்களை தலைமைதாங்கும்  விதவைகளுக்கான வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது .

இந்நிகழ்வில் மாவட்ட பொறியிலாளர் டி சுமன்  மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்  கே .மகேஸ்வரன் , பாலமீன்மடு, கிராம சேவை உத்தியோகத்தர் செல்வி நதிகா ,,பாலமீன்மடு சிவில் குழு உறுப்பினர்கள் , மீனவ சங்க உறுப்பினர்கள் ,பாடசாலை மாணவர்கள் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்  .