பெரிய புல்லுமலை செபமாலை அன்னை திருத்தல ஐப்பசி திருவிழா

(லியோன்)

மட்டக்களப்பு  பெரிய புல்லுமலை  புதுமைமிகு  புனித செபமாலை அன்னை திருத்தலத்தின்  ஐப்பசி  திருவிழா  கொடியிறக்கத்துடன் நிறைவு பெற்றது 
.

மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் மட்டக்களப்பு  பெரிய புல்லுமலை  புதுமைமிகு  புனித செபமாலை அன்னை திருத்தலத்தின்  ஐப்பசி  திரு திருவிழா  கடந்த 27 ஆம் திகதி    வெள்ளிக்கிழமை  மாலை 04.00  மணிக்கு  மணியளவில் பங்கு தந்தை அருட்பணி   பயஸ் பிரசன்னா   தலைமையில்  கொடியேற்றத்துடன் ஆரம்பமானது . 

ஆலய திருவிழா திருப்பலி (29)  ஞாயிற்றுக்கிழமை  அருட்பணி  சி வி அன்னதாஸ்  அடிகளாரின் தலைமையில்  பங்கு தந்தை அருட்பணி பயஸ் பிரசன்னா , அருட்பணி  சுலக்சன்  ஆகியோர் இணைந்து ஒப்புகொடுத்தனர் .

28 ஆம்  சனிக்கிழமை மாலை 04.00 மணிக்கு செபமாலை  அன்னையின் திருச்சுருப பவனியும் தொடர்ந்து விசேட நற்கருணை ஆராதனையுடன் திருப்பலி  .நடைபெற்றது .

திருவிழா   திருப்பலி   ஞாயிற்றுக்கிழமை காலை 07.00 மணிக்கு  அருட்தந்தை சி வி .அன்னதாஸ்  அடிகளாரின் தலைமையில்  திருநாள்  திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டு  கொடியிறக்கத்துடன்  ஆலய  திருவிழா நிறைவு பெற்றது .


இந்த ஆலய திருவிழா திருப்பலியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து வருகை தந்த பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர் .