முல்லைத்தீவு மாந்தை கிழக்கிற்கென பிரதேச போதைத்தடுப் குழு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம்   No drugs நாம் Youth.  " போதைப் பொருளற்ற நாடு " எனும் தொனிப்பொருளில் இளைஞர் போதைத் தடுப்பு சமூகநல விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.

அதன் அடிப்படையில் நாடளாவிய ரீதியில்  500 வேலைத்திட்டத்தினூடாக 5000 இளைஞர் யுவதிகளை தெளிவூட்டும்  வேலைத்திட்டத்திட்டங்கள் அனைத்து பிரதேச செயலக ரீதியாகாவும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.


முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்கான  வேலைத்திட்டம் மாந்தை கிழக்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில்,
மாந்தை கிழக்கு பிரதேச மற்றும் முல்லைத்தீவு மாவட்ட சம்மேளன தலைவர் கே.சுஜாந்
தலைமையில் அ.ஜெயாளன் மாந்தை கிழக்கு பிரதேச இளைஞர் சேவை அதிகாரியின் ஒருங்கிணைப்பில்  இன்று திங்கட்கிழமை   ( 30.10.2017) மாந்தை கிழக்கு பிரதேச செயலக   மண்டபத்தில் நடைபெற்றது.


இந் நிகழ்வில் அதிதிகளாக பிரதேச செயலாளர் , முல்லைத்தீவு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப்பணிப்பாளர் , பொலிஸ் அதிகாரி
ஆகியோர் கலந்துகொண்டு இளைஞர்களுக்கு போதைப்பொருள் மற்றும் மதுபாவனையினால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பக விளக்கமளித்ததோடு பிரதேச போதைத்தடுப்பு குழுவொன்றினையும் ஆரம்பித்து வைத்தனர்.