சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் ஊர்வலம்

சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினம் இன்றாகும்.இதனை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான வெள்ளைப்பிரம்பு தின நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஆரையம்பதியில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண விவசாய,கூட்டுறவு,சமூகசேவைகள் அமைச்சு,ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலை மற்றும் உதயம் விழிப்புலனற்றோர் சங்கம்,கல்முனை அரிமா சங்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இதனையொட்டி ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் இருந்து மாபெரும் விழிப்புணவு ஊர்வலம் நடைபெற்றது.

இந்த ஊர்வலத்தில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ச.நமசிவாயம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

விழிப்புலனற்றோர் வெள்ளைப்பிரவுகளுடன் கலந்துகொள்ள இந்த ஊர்வலம் கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதியுடாக ஆரையம்பதி நந்தகோபன் கலாசார மண்டபம் வரையில் நடைபெற்றது.

வழித்துணைக்கு விழித்துணையாகும் வெண் பிரம்பு என்னும் தலைப்பில் இந்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.