முஸ்லிம் எயிட் நிறுவனத்தினால் தொழில் பயிற்சி பயிலும் துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு

(லியோன்)

முஸ்லிம் எயிட் நிறுவனத்தினால் இலங்கை தொழில் பயிற்சி அதிகார சபையில் தொழில் பயிற்சி நெறிகளை பயிலும்  இளைஞர் யுவதிகளுக்கு துவிச்சக்கர வண்டிகள் நிகழ்வு காத்தான்குடி , கோரளைப்பற்று  தெற்கு , (கிரான்)   கோரளைப்பற்று ஆகிய பிரதேச செயலகங்களில் நடைபெற்றது

.
மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தொழில் பயிற்சி அதிகார சபையின் கீழ் இயங்கும் தொழில் பயிற்சி நிலையங்களில் பயிற்சி நெறிகளை பயிலும்  காத்தான்குடி , கிரான் , வாழைச்சேனை ,போன்ற பிரதேசங்களில் வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களில் பயிற்சி நெறிகளை பயிலும்  40 வறிய முஸ்லிம் தமிழ் இளைஞர் யுவதிகளுக்கான 40 துவிச்சக்கர வண்டிகள் ஐ டி பி  அமைப்பின் அனுசரணையுடன் முஸ்லிம் எயிட்  நிறுவனத்தினால் வழங்கி வைக்கப்பட்டன .

தொழில் பயிற்சி நெறியினை பயிலும் பயிலுனர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்த்வதுடன்  தூர  இடங்களில் இருந்து பயிற்சிகளுக்காக வருபவர்களின் போக்குவரத்து  வசதியினை இலகு படுத்தும்  நோக்கம்  முஸ்லிம் எயிட் நிறுவனத்தினால்  துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.


துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வுகள்   காத்தான்குடி பிரதேச செயலாளர்  எஸ் எச் . முஸாமில் , கோரளைப்பற்று தெற்கு (கிரான்) பிரதேச செயலாளர் தனபால சுந்தரம் , கோரளைப்பற்று பிரதேச செயலாளர் வாசுதேவன் ,ஆகியோரின் தலைமையில்  நடைபெற்ற நிகழ்வில் இலங்கை தொழில் பயிற்சி அதிகார சபை மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர் எம் ஜி  பைசல் , முஸ்லிம் எயிட் நிறுவனத்தின் நிகழ்ச்சி திட்ட முகாமையாளர் எம் டி எம்  பஸ்லான் , மட்டக்களப்பு மாவட்ட நிகழ்ச்சி திட்ட இணைப்பாளர் எ ஜி எம் பாஹி  , பயிற்சி நெறி போதனாசிரியர் , கிராம சேவையாளர்கள் , ,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் , இளைஞர் யுவதிகள்  என பலர் கலந்துகொண்டனர்