ஆரையம்பதி கந்தசுவாமி ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

மட்டக்களப்பு ஆரையம்பதி அருள்மிகு கந்தசுவாமி ஆலயத்தில் கந்த சஷ்டியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ சூரசம்ஹாரம் சிறப்பாக நடைபெற்றது.

ஆலயத்தில் விசேட: ”ஜைகள் நடைபெற்று சூரபத்மனுடன் ஆறுமுகம் தாங்கிய முருகப்பெருமான் போர் புரியும் காட்சி அனைவரையும் மெய்சிலிக்கவைத்தது.

கடந்த ஆறு தினங்களாக ஆலயத்தில் நடைபெற்ற கந்த சஸ்டி விரதத்தினை ஆயிரக்கணக்கானோர் அனுஸ்டித்துவந்தனர்.

இந்த நிலையில் ஆறாவது தினமான நேற்று மாலை சூரசம்ஹார நிகழ்வு ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ சிறப்பாக நடைபெற்றது.

சூரபத்மன் பல்வேறு வடிவங்களில் முருகப்பெருமானுடன் போர் புரியும் காட்சி இங்கு தத்ரூபமாக நடாத்தப்பட்டது.