தேற்றாத்தீவு தரிசனம் பாலர் பாடசாலையின் சிறுவர் பொதுச்சந்தை

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவிகுட்பட்ட தேற்றாத்தீவு தரிசனம் பாலர் பாடசாலையின் ஏற்றபாட்டில் இடம் பெற்ற தரிசனம் சிறுவர் பொதுச்சந்தையும், தரிசனம் பாலர் பாடசாலையின ஆங்கில ஆசிரியர் இரா.திருஞானசம்பந்தரை கௌரவிக்கும் நிகழ்வு இன்று(17.09.2017) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் பாலர் பாடசாலை வளாகத்திற்கு அருகில் பாலர்பாடசாலையின் பெற்றோர் சங்கத்தின் தலைவர் ந.துரைராஜ் தலைமையில் இடம் பெற்றது.இதன் போது தரிசனம் பாலர் பாடசாலையின் மாணர்களின் கலை நிகழ்ச்சியும் அத்துடன் தரிசனம் பாலர் பாடசாலையின் ஆங்கில ஆசிரியர் இரா.திருஞானசம்பந்தரை பொன்னாடை போர்த்தி கௌரவிக்கும் நிகழ்வும் இடம் பெற்றதுடன் சிறுவர்களின் சிறுவர் பொதுச்சந்தையில் பலதரப் பொருட்கள் கொள்வனவும் இடம் பெற்றமையும் குறிப்பிட தக்கவிடயம்.