அமிர்தகழி தூய கப்பலேந்தி அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமானது

 (லியோன்)

மட்டக்களப்பு  அமிர்தகழி தூய கப்பலேந்தி அன்னை  ஆலய வருடாந்த திருவிழா  கொடியேற்றத்துடன் ஆரம்பமானது


மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் மட்டக்களப்பு அமிர்தகழி தூய கப்பலேந்தி அன்னை  ஆலய 209 வது வருடாந்த திருவிழா  கொடியேற்ற நிகழ்வு  (15)  வெள்ளிக்கிழமை மாலை 05.30 மணியளவில் பங்கு தந்தை அருட்பணி  சி .வி. அன்னதாஸ்  தலைமையில்  இடம்பெற்றது .

ஆலய திருவிழா கொடியேற்ற நிகழ்வினை தொடர்ந்து   விசேட திருப்பலி அருட்பணி நவரெட்ணம் (நவாஜி) அடிகளாரின் தலைமையில்  ஒப்புகொடுக்கப்பட்டது .

திருவிழா நவ நாட்காலங்களில் தினமும் மாலை 05.30 மணிக்கு திருச்செபமாலையும் ,திருப்பலியும் இடம்பெறும்.

எதிர்வரும் 23ஆம் திகதி   சனிக்கிழமை மாலை 05.30 மணிக்கு அன்னையின் திருவுருவ  பவனியும் தொடர்ந்து விசேட திருப்பலி  24ஆம் திகதி   ஞாயிற்றுக் கிழமை காலை 07.00 மணிக்கு  மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசெப் ஆண்டகை  தலைமையில் விசேட  திருநாள்  திருப்பலி ஒப்புகொடுக்கப்படும்   .