வெல்லாவெளி- சின்னவத்தையில் யானைகள் அட்டகாசம்


(பழுகாமம் நிருபர்)
மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட சின்னவத்தை கிராமத்தினுள்  இன்று (16) அதிகாலை காட்டுயானைகள் புகுந்து கிராமவாசிகளின் குடிசைகளை சேதமாக்கியுள்ளது. இவ்வாறு ஐந்து வீடுகளை சேதமாக்கியதுடன் விஸ்வலிங்கம் சுவாஸ்கரன் என்ற 22 வயது இளைஞனும் சிறுகாயங்களுடன் அம்பாரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வீட்டினுள் இருந்த நெல் மூடைகளை துவம்சம் செய்துள்ளது.