வீதியில் உள்ள கழிவுகளை அகற்றும் நடவடிக்கையில் சமூக பொலிஸ் குழு

(லியோன்)

வீதியில் உள்ள கழிவுகளை அகற்றும்  நடவடிக்கையில்  சமூக பொலிஸ் குழு உறுப்பினர்களும் பொலிசாரும் இணைந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்


மட்டக்களப்பு தாண்டவன்வெளி கிராம சேவை பிரிவு சமூக பொலிஸ் குழு உறுப்பினர்களும்  மற்றும் சமூக தொடர்பாடல் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இணைந்து தாண்டவன்வெளி  வாவிக்கரை பிரதான வீதி கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர் .

கடந்த 14 ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட இடைக்கால உத்தரவினை தொடர்ந்து மட்டக்களப்பு மாநகர சபையினால் கழிவுகளை அகற்றும் பணிகள் தற்காலியமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது .

இதனால் மட்டக்களப்பு நகரில் பிரதான வீதி ஓரங்களில் வீட்டுக் கழிவுகள் மற்றும் விலங்கு கழிவுகள்  வீசப்படுகின்ற காரணத்தினால் வீதியில் பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருவதாக  தெரிவிக்கின்றனர்  .


இவ்வாறு பொதுமக்கள் ,பாடசாலை மாணவர்கள் பயணிக்கும் வீதிகளில் கழிவுகளை போடுகின்றவர்களுக்கு  விழிப்புணர்வை  ஏற்படுத்தும் வகையில்  வீதியில் உள்ள கழிவுகளை அகற்றும்  நடவடிக்கையில் தாண்டவன்வெளி சமூக பொலிஸ் குழு உறுப்பினர்களும் மற்றும் மட்டக்களப்பு பொலிஸ் சமூக தொடர்பாடல் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இணைந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்