மியன்மார் நாட்டின் தலைவி ஆங் சாங் சுயிகுயிக்கு வழங்கப்பட்ட நோபள் பரிசை வாபஸ் பெறவேண்டும்

மியன்மார் நாட்டின் தலைவி ஆங் சாங் சுயிகுயிக்கு வழங்கப்பட்ட நோபள் பரிசை வாபஸ் பெற வேண்டுமென பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் தலைவியும் காத்தான்குடி நகர சபையின் முன்னாள் உறுப்பினருமான சல்மா ஹம்சா தெரிவித்தார்.


(4.9.2017) திங்கட்கிழமை மியன்மார் ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது மியன்மார் அரசாங்கம் நடாத்தி வரும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து காத்தான்குடியில் நடாத்திய ஆர்ப்பாட்ட பேரணியின் போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன் போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் மியன்மார் ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது மியன்மார் அரசாங்கம் மிக மோசமான தாக்குதலை நடாத்தி வருகின்றது.

ஆயிரக்கண்ககான முஸ்லிம்கள் மிக மோசமாக படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் அகதிகளாக இடம் பெயர்ந்து வருகின்றனர். அவர்களின் குடியுரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன.

குழந்தைகள் சிறுவர்கள் பெண்கள் கர்ப்பிணித்தாய்மார் என பலரும் மிக மோசமாக மிலேச்சனத்தனமாக ஈவி இரக்க மின்றி படுகொலை செய்யப்படுகின்றனர்.

மனித நேயமுள்ள எவரும் இந்த படுகொலைகளை பார்த்துக் கொண்டிருக்கமாட்டார்கள். இந்த குழந்தைகளை பார்த்துக் கொண்டு பதற பதற கொலை செய்கின்றார்களே இதற்குத்தானா மியன்மார் நாட்டின் தலைவி ஆங் சாங் சுயிகுயிக்கு நோபள் பரிசு கொடுக்கப்பட்டது என நான் கேட்க விரும்பகின்றேன்.

ஒரு பெண்ணின் உள்ளத்தில் இரக்க சிந்தனை கருணை இருக்கும் என்பார்கள். ஆனால் இந்த மியன்மார் நாட்டின் தலைவி ஆங் சாங் சுயிகுயிக்கு மனிதாபிமானம் எங்கே போனது.

மியன்மார் ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது தாக்குதலை ஏவி விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் இந்த பெண்ணுக்கா நோபள் பரிவு வழங்கப்பட்டது.

எனவே நாங்களும் பெண்கள் என்ற வகையில் இவருக்கு வழங்கப்பட்ட இந்த நோபள் பரிசை மீள வாப்பஸ் பெறவேண்டுமென இந்த சந்தர்ப்பத்தில் வேண்டுகோள் விடுக்கின்றேன் என்றார்.