களுவாஞ்சிகுடியில் மனோகணேசன் -நடமாடும் சேவையிலும் பங்கேற்பு

தேசிய சகவாழ்வு மற்றும் அரச கருமொழிகள்  அமைச்சினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் நடமாடும் சேவையின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான நடமாடும் சேவை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மட்டக்களப்பில் ஆரம்பமானது.

அரசசேவை உங்களுக்காக என்னும் தலைப்பில் பொதுமக்களின் பல்வேறுபட்ட பிரச்சினைகளை இனங்கண்டு தீர்த்துவைக்கும் வகையில் இந்த நடமாடும் சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஓந்தாச்சிமடம் விநாயர் வித்தியாலகத்தில் இந்த நடமாடும் சேவை நடைபெற்றது.

இதன் ஆரம்ப நிகழ்வு களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் திருமதி வி.சிவப்பிரியா தலைமையில் நடைபெற்றபோது தேசிய சகவாழ்வு மற்றும் அரச கருமொழிகள்  அமைச்சர் மனோகணேசன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சுpறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன்,எஸ்.வியாழேந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது ஒருவர் எதிர்கொள்ளும் பல்வேறு அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொள்ளும் வகையில் பிரதேச மாவட்ட மட்;டங்களில் உள்ள அனைத்து அலுவலகங்களின் சுமார் 20 கிளைகளும் ஒரே குடையின் கீழ் கொண்டுவரப்பட்டு நடமாடும் சேவை நடாத்தப்பட்டது.

அத்துடன் காணாமல்போனவர்களின் குடும்பத்தினருக்கான உதவிகளும் இதன்போது அமைச்சரினால் வழங்கிவைக்கப்பட்டன.