மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்தின் நடமாடும் சேவை


மட்டக்களப்பு தலைமை பொலிஸ்  நிலையத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள பொலிஸ் நடமாடும் சேவை  இன்று மட்டக்களப்பு நாவலடி நாமகள் வித்தியாலயத்தில்  ஆரம்பமானது .

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட  ,திராய்மடு , பனிச்சையடி , நாவலடி , ஆகிய கிராம சேவை பிரிவு கிராம மக்களின் நலன் கருதி  மட்டக்களப்பு தலைமை பொலிஸ்  நிலையத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள பொலிஸ் நடமாடும் சேவை  இன்று மட்டக்களப்பு நாவலடி நாமகள் வித்தியாலயத்தில் கிழக்குமாகாண சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபராக எச் .டி .கே .எஸ் ஜயசேகர    தலைமையில்   இடம்பெற்றது.

இந்த நடமாடும் சேவையில் மக்களுடைய பொலிஸ் சம்பந்த பட்ட முறைபாடுகள் , சிறுவர் மகளீர் தொடர்பான முறைபாடுகள் , கிராம மட்டத்தில் கிராம சேவையாளர்களின் ஆவன பதிவுகளான ,  தேசிய அடையாள அட்டை , காணி தொடர்பான ஆவன விபரங்கள், மோட்டார் வாகன தொடர்பான முறைபாடுகள் மற்றும் நோய் தொடர்பான ஆயுள் வேத வைத்திய பரிசோதனைகள் அதற்கான மருந்து விநியோகம் போன்ற சேவைகள் இடம்பெற்றது .

நடமாடும் சேவை  நிகழ்வில் சமைய தலைவர்கள் ,சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் ,மாவட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ,பொலிஸ் உத்தியோகத்தர்கள்  மற்றும் கிராமசேவை உத்தியோகத்தர்கள் பாடசாலை மாணவர்கள் ,பொதுமக்கள்  என பலர்  கலந்து கொண்டனர் .

கிராமங்கள் தோறும் உள்ள மக்களின் ஆவனங்கள் தொடர்பான பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் வகையில் இந்த நடமாடும் சேவைகள் நடாத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.