ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்ச்சவத்தின் 5ம் நாள் திருவிழா


ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்ச்சவத்தின் 5ம் நாள் திருவிழா(01.09.2017) கவுத்தன் குடி மக்களினால் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

இதில் தோறணம் கொண்டு பட்டு எடுத்து வரும் நிகழ்வு ஸ்ரீ முருகன் ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி ஸ்ரீ கிருஷ்ணன் ஆலயத்தை வந்தடைந்து மீண்டும் செட்டிபாளயம் சித்திவினாயகர் ஆலயத்தை தரிசித்து ஆலயத்துக்கு வருகை தந்தது.

இவ் உற்சவத்தை சிறப்பிக்க தாண்டவராஜன் வடிவேல் அவர்கள் பூமாலைகளினாலும் சாத்துப்படி அலங்காரத்தினாலும் சுவாமியை அழகு படுத்தி இருந்தார்.இவ் உற்ச்சவ நிகழ்வுகள் அனைத்தும் கவுத்தன் குடி வண்ணக்கர் கிருஷ்ணபிள்ளை சாந்தலிங்கம் அவர்கள் தலமையில் இடம்பெற்றது.