(பழுகாமம் நிருபர்)
பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட அதிகஷ்ட எல்லைப்புற பாடசாலையான காக்காச்சிவட்டை விஷ்னு மகா வித்தியாலயத்தில் உயர்தரம் ஆரம்பிக்கப்பட்டது. பொதுமக்கள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரத்திடம்(ஜனா) முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக அவர் மேற்கொண்ட பெருமுயற்சியினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த பாடசாலையானது 1956ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 1996ம் ஆண்டு க.பொ.த(சா.த) ஆரம்பிக்கப்பட்டிருந்தது. சாதாரணதரம் சித்தியடையும் மாணவர்கள் பலர் பொருளாதார பிரச்சினை காரணமாக இடைநடுவில் கல்வியை கைவிடுகின்ற நிலை ஏற்படுகின்றமையும் சுட்டிகாட்டத்தக்கது.




