குருபெயர்ச்சி ஹோமம் தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில்

நிகழும் மங்களகரமான ஏவிளம்பி வருடம் ஆவணி மாதம் 14 நாள் சனிக்கிழமை 02.09.2017 அன்று பகல் 10.48  குரு பகவான் கன்னி இராசியில்இருந்து துலாம் இராசிக்கு இடம் பெயர்கிறார். .இதனை முன்னிட்டு தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்திலுள்ள நவக்கிரக ஆலயத்தில் விசேட குருபெயர்ச்சி   ஹோமம் இடம் பெற்றது.


குருபெயர்ச்சியில் தோஷ ராசி நட்சத்திரங்களை உடைய அடியார்கள் தங்கள் கைகளினால் ஆகுதிகளை ஈட்டு வழிபட்டதுடன்.குரு பகவானுக்கு கடலை மாலை மஞ்சள் பட்டு தேங்காய் வெட்டி தோஷ நிவர்த்தி செய்து வழிபட்டனர்.
குருபெயர்ச்சி   ஹோமத்தில் பல நூற்றுக்கணக்கான அடியார்கள் கலந்து கொண்டனர்