உலகளாவிய ரீதியில் ப்ளு வேல் விளையாட்டால் 130க்கும் மேட்பட்டோர் பலி,

உலகளாவிய ரீதியில் 130க்கும் மேற்பட்டவர்களை பலியெடுத்த ப்ளு வேல் விளையாட்டில் பின்னணியிலிருந்ததாக சந்தேகிக்கப்படும் சிறுமி ஒருவரை ரஷ்ய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

17 வயதான சிறுமி ஒருவரையே இவ்வாறு கைது செய்துள்ளதாகவும், அத்துடன் மொஸ்கோ அருகே வைத்து இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாகவும் அந்நாட்டு பொலிஸார் கூறியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சிறுமியும் ஆரம்பத்தில் ப்ளு வேல் விளையாட்டில் ஈடுபட்டவர் எனவும், எனினும், இறுதிக் கட்ட சவாலை தேர்ந்தெடுக்க தவறியவர் எனவும் அந்நாட்டு அரச புலனாய்வாளர்கள் கூறியுள்ளனர்.

இதனையடுத்து ஏனையவர்களை தற்கொலைக்கு தூண்டும் நிர்வாகியாக செயல்படும் பணியை குறித்த சிறுமி தெரிவு செய்துள்ளார் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த சிறுமியின் கட்டளைக்கு கீழ்படியாவிட்டால் உறவினர்களையோ அல்லது நெருக்கமானவர்களையோ கொன்று விடுவதாக ப்ளூ வேல் விளையாட்டை விளையாடி வந்தவர்களுக்கு மிரட்டல் கொடுத்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சின் செய்தி தொடர்பாளர் Colonel Irina Volk தெரிவித்துள்ளார்.