மட்டக்களப்பில் யானை மோதி குடும்பஸ்தர் பலி

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை யானை தாக்கியதன் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வெல்லவெளி புத்தடிமேடு பகுதியில் வைத்து யானையின் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்துள்ளவர் வெல்லாவெளி பகுதியை சேர்ந்த தம்பிராசா திருச்செல்வம்(62வயது)என்பவரே உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணையை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.