காத்தான்குடி பொலிஸ் நிலைய ஆறுமாத ஆய்வு அறிக்கை பரிசோதனைகள்

 (லியோன்)

மட்டக்களப்பு காத்தான்குடி   பொலிஸ் நிலையத்திற்கான  ஆறுமாத கால ஆய்வு அறிக்கை பரிசோதனைகள்  இன்று காத்தான்குடியில்   நடைபெற்றது


மாவட்டத்தின்   காத்தான்குடி  பொலிஸ் பிரிவின்  பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் மற்றும்  பொலிஸ் நிலை  போக்குவரத்து வாகனங்களுக்கான ஆறுமாத கால  ஆய்வு அறிக்கை பரிசோதனைகள்  மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான அணிவகுப்பு பரிசோதனைகள் புதிய  மாவட்ட  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்   சமன் யடவர   வழிகாட்டலுக்கு அமைய காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில்  காத்தான்குடி நாவக்குடா விளையாட்டு மைதானத்தில்    நடைபெற்றது  .


இன்று  நடைபெற்ற  பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையிலான  ஆய்வு அறிக்கை பரிசோதனை நிகழ்வில்  காத்தான்குடி   பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  ,பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள்  கலந்துகொண்டதுடன் , அனைத்து பொலிஸ் நிலைய போக்குவரத்து வாகனங்களுக்கான  பரிசோதனை   நடைபெற்றன