இந்து கல்லூரியின் வீதி மற்றும் வளாகத்திற்கான காபட் இடும் பணிகள் ஆரம்பம்

(லியோன்)

மட்டக்களப்பு இந்து கல்லூரியின்  வீதி மற்றும் வளாகத்திற்கான காபட் இடும் பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது
.

கிழக்குமாகாண விவசாய ,கால்நடை ,கூட்டுறவு ,மீன்பிடி அமைச்சர் கே .துரைராஜசிங்கத்தின்  வேண்டுகோளுக்கு இணங்க கிழக்குமாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மட்டக்களப்பு இந்து கல்லூரியின் வீதி மற்றும் வளாகத்திற்கான காபட் இடும் பணிகள் இன்று அமைச்சர் கே .துரைராஜசிங்கம் கலந்துகொண்டு  ஆரம்பித்து வைத்தார்  

கல்லூரி அதிபர் அருள்பிரகாசத்தின் தலைமயில்  வீதி அபிவிருத்தி அதிகார சபையின்  5.5 மில்லியன் ரூபா செலவில் இந்த காபட் இடும் வேலைகள் இன்று கல்லூரி வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது .


இந்நிகழ்வில் கிழக்குமாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்குமாகாண பணிப்பாளர் வை .தர்மரெட்ணம் ,மட்டக்களப்பு மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதான பொறியிலாளர் பத்மராஜா ,மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலக  பிரதி பணிப்பாளர் பி .கோவிந்தராஜா ,தரிசனம் நிலைய தலைவர் தயானந்தன் , கல்லூரி பழைய மாணவர்களான சதாசிவம் , எ .செவேந்திரன் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் ,மாணவர்கள் கலந்துகொண்டனர்