உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கான விழிப்புணர்வு செயமலர்வு

(லியோன்)


உலக சுகாதார நிறுவனம் 2003ஆண்டு தொடக்கம் உலக தற்கொலை தடுப்பு தினத்தை பிரகடனப்படுத்தி வருடம் தோறும் செப்டெம்பர் மாதம் 10ஆம் திகதி அன்று அனுஷ்டித்து  வருகின்றது
.


15 வது உலக தற்கொலை தடுப்பு தினத்தை  முன்னிட்டு மட்டடக்களப்பு வலயக்கல்வி திணைக்களம்  மற்றும்  தொழில்சார் உளநல உதவி நிலையத்தின் ஏற்பாட்டில் “ ஒரு உயிரை காக்க ஒரு நிமிடத்தை கொடுப்போம்” எனும் தொனிப்பொருளில் பாடசாலை மட்டத்தில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு செயமலர்வுகளை நடாத்திவருகின்றது .


இதன் கீழ் மட்டக்களப்பு கல்வி வலய பாடசாலைகளில் தெரிவு செய்யப்பட பாடசாலை  மாணவர்களுக்கான தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு செயமலர்வு  தொழில்சார் உளநல உதவி நிலைய ஆலோசகர்களின் ஒழுங்கமைப்பில் மட்டக்களப்பு கல்வி திணைக்கள தொழில் வழிகாட்டி ஆலோசகர் ஜெகநாதன் தலைமையில் மட்டக்களப்பு மகாஜன கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது . 



இந்த விழிப்புணர்வு செயலமர்வில் வளவாளராக  தொழில்சார் உளநல உதவி நிலையத்தின் இயக்குனர் யேசுசபை துறவி போல் சற்குணநாயகம் தொழில்சார் உளநல உதவி நிலையத்தின் ஆலோசகர்கள் ,  ஆறையம்பதி ,தன்னாமுனை , புனித சிசிலியா , மகாஜன கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர்