கிராமங்களில் உள்ள மைதானங்களை அரசு புனநிர்மானம் செய்ய வேண்டும்.


(பழுகாமம் நிருபர்)
மட்டக்களப்பின் கிராமங்களில் உள்ள மைதானங்களை புனநிர்மானம் செய்ய துறைசார்ந்த அமைச்சுக்கள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். பெரிய போரதீவு பட்டாபுரம் லக்கி ஸ்டார் விளையாட்டு கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவிக்கையில் 
அரசாங்கம் பின்தங்கிய கிராமங்களில் உள்ள விளையாட்டு மைதானங்களை புனரமைப்பதனை மேற்கொள்வதன் மூலம் இளைஞர்களை நல்வழிப்படுத்த முடியும். மாலைநேரங்களில் இளைஞர்கள் விளையாட்டில் ஆர்வம் செலுத்துவார்களாயின் துர்நடத்தைகளில் இருந்து பாதுகாக்கப்படுவார்கள். 

விளையாட்டில் ஆர்வம் காட்டுவதற்கு அடிப்படை தேவையான மைதானம் மற்றும் விளையாட்டுப்பொருட்களை வழங்கி ஊக்குவிக்க வேண்டும். தற்போது எமது பிரதேசங்களில் திறமையான விளையாட்டு வீரர்கள் உள்ள போதும் அவர்களின் திறமைகள் வெளிக்கொணர்வதற்கான களம் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் அவர்கள் சாதனை வீரர்களாக மாற்றப்படுவார்கள். அதற்காக எமது இராசமாணிக்கம் மக்கள் அமைப்பு அவ்வாறான வீரர்களை வெளிச்சத்திற்கு கொண்டுவர தயாராக உள்ளது என தெரிவித்தார்.