மதுவரித்திணைக்களத்தினால் களுவன்கேணி - 2 பகுதியில் சுற்றிவளைப்பு

(லியோன்)

மட்டக்களப்பு மாவட்டத்தின்  செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட களுவன்கேணி பகுதியில்  நீண்டகாலமாக சட்ட விரோத கசிப்பு உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்ட இடம் இன்று   மட்டக்களப்பு மாவட்ட  மதுவரித்திணைக்களத்தினால் சுற்றிவளைப்பு


மட்டக்களப்பு மாவட்ட மதுவரி திணைக்கள அதிகாரி எஸ் .குகநேசனுக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய மட்டக்களப்பு மாவட்ட மதுவரி திணைக்கள பிரதி பொறுப்பதிகாரி பொன்னம்பலம்  செல்வகுமார்  தலைமையிலான குழுவினரினால்  களுவன்கேணி - 2  பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில்  கசிப்பு விற்பனை மற்றும் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட  நான்கு பேரும் அரச அனுமதி பெற்ற சாராயம் சட்டவிரோதமாக விற்பனை செய்த ஒரு நபரும்  கைதுசெய்யப்பட்டுள்ளதுடன்  கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்ட ஐவரும்  பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் .குறித்த  ஐவருக்கும் எதிராக  எதிர்வரும் 13 ஆம் திகதி ஏறாவூர் நீதவான் நீதிமன்றில் சட்ட  நடவடிக்கைக்காக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக  மாவட்ட மதுவரி திணைக்கள பிரதி பொறுப்பதிகாரி பொன்னம்பலம்  செல்வகுமார்  தெரிவித்தார்.