News Update :
Home » » மட்டக்களப்பினை உலுக்கிய சத்துருக்கொண்டான் படுகொலை நினைவு தினம்.

மட்டக்களப்பினை உலுக்கிய சத்துருக்கொண்டான் படுகொலை நினைவு தினம்.

Penulis : Unknown on Saturday, September 9, 2017 | 7:02 PM

(மண்டூர் நிருபர்)    மட்டக்களப்பினை உலுக்கிய சத்துருக்கொண்டான் படுகொலை நினைவு தினம்.

உலகத் தமிழ் மாணவர் ஒன்றியம் மற்றும் பிரதேச மக்களின் ஏற்பாட்டில் மிகவும் உணர்வுபூர்வமாக அனுஸ்ட்டிக்கப்பட்டது சத்துருக்கொண்டான் படுகொலை நாள். இன்று(09)
சனிக்கிழமைபி.ப4:30மணியளவில் சத்துருக்கொண்டானில் இடம்பெற்றது.

ஆலய வழிபாட்டுடன் ஆரம்பித்த நினைவேந்தல் நிகழ்வு பிரதேச மக்கள்,பல்கலைக்கழக மாணவர்கள்,அரசியல் பிரதிநிதிகள் என அனைவரும் படுகொலையான உறவுகளிற்கு தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்துதலுடன் ஆரம்பமானது.
தொடர்ந்து
இப்படுகொலைகளுக்கு நீதி வேண்டி உலகத் தமிழ் மாணவர் ஒன்றியத்தின் பொதுச்செயலாளர் யோன்சன் மற்றும் பிரதேச மக்கள் அரசியல் பிரதிநிதிகள் என பலரும் அழுத்தம் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் சத்துருக்கொண்டான், பனிச்சையடி, பிள்ளையாரடி, கொக்குவில் ஆகிய கிராமங்களில் வீடுகளில் தங்கியிருந்த பொது மக்கள் கடந்த 09.09.1990 ஆம் ஆண்டு மாலை 5.30 மணியளவில் சத்துருக்கொண்டான் இராணுவ முகாமுக்குள் அழைத்துச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.
இவற்றில் 5 பிள்ளைகள் விசேட தேவையுள்ள பிள்ளைகள், மேலும் 42 பிள்ளைகள் 10 வயதிற்குட்பட்ட பிள்ளைகள், 85 பேர் பெண்கள், 28 பேர் முதியவர்கள் கொலை செய்யப்பட்டனர்.
இக்கொலை சம்பந்தமாக சென்ற வருடம் காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதற்கான ஐனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை இடம் பெற்று ஒரு வருடகாலமாக இவற்றுக்கான எந்தவித நடவடிக்கைகளும் இன்று வரை மேற்கொள்ளவில்லை.
சம்பவம் இடம்பெறும் முதல் நாள் அன்று இராணுவ முகாம்களிலிருந்து இராணுவ உளவாளிகள் நோட்டமிட்டனர்.
நன்கு திட்டமிட்டு அடுத்த நாள் அதாவது 09.09.1990 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணியளவில் இசாணுவ சீருடையணிந்தவர்களும் சத்துருக்கொண்டான் முகாமுக்கு வாருவார்கள் அங்கே உங்களுக்கு கூட்டம் ஒன்று இருக்கின்றது என்று கூறி அழைத்துச் செல்லப்பட்டனர்.
நடக்கமுடியாதவர்களை இராணுவ லொறிகளில் ஏற்றிச்சென்று அங்கு கொண்டு சென்று இவர்களை ஆண்கள் வேறு, பெண்கள் வேறு பிள்ளைகள் வேறாக பிரிக்கப்பட்டனர்.
சிங்கள இராணுவமும் முஸ்லிம் ஊர்காவல் படையும் இணைந்தே இந்த கோர தாண்டவம் அரங்கேற்றப்பட்டுள்ளன.
இவற்றுக்கெல்லாம் தயாரான நிலையில் அன்று மாலை 7.00 மணியளவில் இவர்கள் வாளினால் வெட்டியும், கத்தியினால் குத்தியும் துப்பாக்கிகளினால் சுடப்பட்ட அப்பாவி பொதுமக்கள் ரயர் போட்டு எரிக்கப்பட்டனர்.
இவ்வாறு கொலை செய்யப்பட்ட மக்கள் குழிகளில் தூக்கி வீசப்பட்டனர்.   அன்று மாலை 8.00 மணியளவில் பெரும் கூக்குரல் சத்தமும் சிறுவர்களின் மரண ஓலசச் சத்தமும் எங்கும் எதிரொலித்த வண்ணம் காணப்பட்டது.
இவ்வாறு வெட்டி குழியில் வீசப்பட்ட ஒருவர் அக்குழியில் விழாமல் துரதிஸ்ட வசமாக வெளியில் வீசி எறியப்பட்டார். இவ்வாறு வெட்டு காயங்களுடன் தடுப்பு வேலியருகே வீசப்பட்ட நபர் தவன்று சென்று அருகே இருந்த பற்றைக்குள் ஒழிந்து, மறுநாள் காலை வேளையில் அமெரிக்க மிசன் பாதர் மூலம் மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட பின்னர்.
இதனை அறிந்த சிறிலங்கா இராணுவ உளவாளிகள் வைத்தியசாலையயில் வைத்து அவரை கடத்த முற்பட்டனர். இதனை அறிந்த பாதர் அவரின் பாதுகாப்பில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு உயிருடன் காப்பாற்றப்பட்டார்.
இவர் மூலமாக பல தகவல்கள் வெளிவந்தன. பின்னர் மனித உரிமை ஆணைக்குழு மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் போன்ற அமைப்புக்கள் சத்துருக்கொண்டான் இராணுவ முகாமிற்கு சென்று நடந்த சம்பவத்தை முகாமிற்கு பொறுப்பான இராணுவ அதிகாரியிடம் வினவப்பட்டது.
இதற்கு அவர்கள் கூறிய பதில் இங்கு யாரையும் நாங்கள் கொண்டுவரவுமில்லை. அவ்வாறான சம்பவம் ஏதும் இங்கு இடம்பெறவுமில்லை என்பதே இவர்களின் பதிலாக அமைந்தது.
இதற்கு பொறுப்பான இராணுவ அதிகாரிகளாக இம்முகாமில் கடமையாற்றிய கப்டன் காமினி வர்ணகுலசூரிய, கெரத் மற்றும் விஜயநாயக்க மேலும் இதற்கான கட்டளை அதிகாரி கேணல் பெசி பெனாண்டோ இக் கொலைக்கான முக்கிய சுத்திரதாரியாக இனம் காணப்பட்டனர். இன்று வரை இக்கொலைக்கான எவ்வித விசாரணையும் நடைபெறவுமில்லை.
இவ் நான்கு இராணுவத்தினர் தற்போதும் உயிருடன் இருக்கின்றார்கள் ஏன்? இதுவரை கொலைக்கான எவ்வித விசாரணைகளும் இடம் பெறவில்லை.
இவர்களுக்கான தண்டணையும் சட்டநடவடிக்கையும் இடம்பெறவில்லை.
ஐனாதிபதி ஆணைக்குழுவில் வாக்கு மூலங்கள் கொடுக்கப்பட்டும் ஆதாரங்கள் கொடுக்கப்பட்டும் எந்த நபருக்கும் எவ்வித விசாரணைகளோ, தண்டனைகளோ இடம் பெறவில்லை.
ஏன் இவ்வாணைக்குழு கண்துடைப்பாக செயற்படுகின்றது. இவ்வாணைக்குழுவிற்கு வாக்குமூலங்கள் கொடுப்பதால் குற்றவாளிகள் ஆதாரங்களை அழிப்பதற்கான சந்தர்ப்பமாக அமையுமே ஒழிய இவற்றை விசாரணை செய்து இவ்மிருகத்தனமான இன வெறி படுகொலைக்கு யார் பொறுப்புக்கூறுவார்கள். இக்கொலையாளி தற்போதும் சுதந்திரமாக நடமாடுகின்றார்கள்.
மேலும் இக்கொலை சம்பந்தமாக ஓய்வு பெற்ற நீதிபதி கே.பாலக்கிட்ணர் விசேட குழு ஐனாதிபதியினால் நியமிக்கப்பட்டு விசாரணை இடம் பெற்றது.
இவ்விசாரணையில் அடையாளம் காணப்பட்ட இலங்கை இராணுவ அதிகாரிகள் காமினி வர்ணகுல சூரிய, கேரத், மற்றும் விஐய நாயக்க இவர்களுக்கு கட்டளை அதிகாரிகளாக கேணல் பேசி, பெர்ணாண்டோ இந்நான்கு பேருமே குற்றவாளியாக இனம் காணப்பட்டு தீர்ப்புக் கூறப்பட்டது.
ஆனால் இதுவரையும் எவ்வித விசாரணையும் இடம்பெறவில்லை. இவைவெறும் கண் துடைப்பு நாடகமாக இருக்கின்றது.

எனவே இவ்விசாரணை மீண்டும் இவ் நல்லாட்சியிலாவது நடைபெறுமா? அல்லது மூடி மறைக்கப்படுமா? என்பது புரியாத புதிராகவே இருக்கின்றது.
இவை அனைத்தும் ஐக்கிய நாட்டு சபைக்கு விசாரணைக்காக கொண்டு செல்லப்படுமா?

Share this article :

Post a Comment

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger