அமிர்தகழி கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தின் மாபெரும் இரத்ததான முகாம்

 (லியோன்)

மட்டக்களப்பு  அமிர்தகழி கப்பலேந்தி அன்னை ஆலய கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தின் ஒழுங்கமைப்பில் மாபெரும் இரத்ததான  முகாம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை  நடைபெற்றது


இந்த இரத்ததான முகாமினை அமிர்தகழி கப்பலேந்தி அன்னை ஆலய பங்கு தந்தை சி வி .அன்னதாஸ் அடிகளார் கலந்துகொண்டு  ஆரம்பித்து வைத்தார்   

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்தவங்கியில் நிலவும் இரத்தப்பற்றாக்குறையை நிவர்த்திசெய்யும் வகையில் “” ஒரு துளி இரத்தம் தானம் செய்து ஒரு உயிரை காப்பாற்ற ஒன்றினைவோம் எனும் தொனிப்பொருளில் “”  இந்த இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இளைஞர்கள் சமூக சேவைகளை மேற்கொள்ளவேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் அமிர்தகழி கப்பலேந்தி அன்னை ஆலய கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தினால் பல சமூக பணிகளை முன்னெடுத்துவருகின்றது.


இதன்கீழ் இன்று காலை 09.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை இந்த இரத்ததான முகாம் நடத்தப்பட்டது
 
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப்பிரிவு வைத்தியர் திருமதி என் .கந்தன் , போதனா வைத்தியசாலையின் தாதியர்கள் மற்றும் அமிர்தகழி கப்பலேந்தி அன்னை ஆலய கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தின் இளைஞர் யுவதிகள் கலந்துகொண்டனர். .