சகாயபுரம் தூய சதாசகாய அன்னை ஆலய வருடாந்த திருவிழா கொடியேற்ற நிகழ்வு

 (லியோன்)

 மட்டக்களப்பு  சகாயபுரம் தூய சதாசகாய அன்னை  ஆலய வருடாந்த திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது


மட்டக்களப்பு மறை மாவட்டத்தின்  சகாயபுரம் தூய சதாசகாய அன்னை  ஆலய வருடாந்த திருவிழா  கொடியேற்ற நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை மாலை 05.30 மணியளவில் பங்கு தந்தை அருட்பணி  பேதுரு ஜீவராஜ்  தலைமையில்   நடைபெற்றது  

ஆலய திருவிழா கொடியேற்ற நிகழ்வினை தொடர்ந்து விசேட திருப்பலி  அருட்பணி லோரன்ஸ் அடிகளாரின் தலைமையில் ஒப்புகொடுக்கப்பட்டது .
 ஆலய திருவிழாவின் அன்னையின் திருச்சுருவ பவணி எதிர்வரும் 12 ஆம் திகதி   சனிக்கிழமை  மாலை வழமையான வீதிகளினுடாக எடுத்துவரப்பட்டு, ஆலயத்தில் விசேட   திருப்பலியும்  ,திவ்விய நற்கருணை வழிபாடுகளும் , மறைவுரைகளும்  நடைபெறும்  


எதிர்வரும் 13 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 07.00 மணிக்கு மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் கலாநிதி  பொன்னையா ஜோசப் தலைமையில் விசேட   கூட்டுத்திருப்பலி ஒப்புகொடுக்கப்படும்  .