சட்டவிரோத மீன்பிடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் விடுதலை


சட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈட்டுபட்டதாக  15 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு விசாரணையின் பின் விடுவிக்கப்பட்டதாக  கடற்தொழில் நீரியல் வளங்கள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர் .


மட்டக்களப்பு  முகத்துவாரம் அண்மித்த  கடல்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கடற்படையினரால் 15 பேர் கைதுசெய்யப்பட்டதுடன் மீன்பிடிக்காக பயன்படுத்தப்பட்ட வலைகள் மற்றும் 40  குதிரை வலுக்கொண்ட நான்கு இயந்திரங்களும் 15 குதிரை வலுக்கொண்ட ஒரு இயந்திரமும் கைப்பற்றப்பட்டு மாவட்ட கடற்தொழில் நீரியல் வளங்கள் திணைக்களத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளதாக கடற்தொழில் நீரியல் வளங்கள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் கடற்தொழில் நீரியல் வளங்கள் திணைக்கள அதிகாரிகளினால் மேற்கொள்ளாப்பட்ட விசாரணைகளின் பின்  15 பேர் மீனவர்களும்  விடுவிக்கப்பட்டதாக  அதிகாரிகள் தெரிவித்தனர்


கைப்பற்றப்பட்ட இயந்திரங்கள் மற்றும் வலைகள் சட்ட நடவடிக்கைகாக எதிர் வரும் செவ்வாய்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டு குறித்த சம்பவம் தொடர்பில் 15 பேர் மீனவர்களுக்கும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என  கடற்தொழில் நீரியல் வளங்கள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர் .