மயிலம்பாவெளி அருள்மிகு காமாட்சி அம்பாள் ஆலய வரலக்ஷ்மி பூசை வழிபாடுகள்

 (லியோன்)


மட்டக்களப்பு  மயிலம்பாவெளி  அருள்மிகு காமாட்சி அம்பாள் ஆலயத்தில் இன்று மாலை வரலக்ஷ்மி பூசை வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்றன.
திருமணமான பெண்கள் கணவர்மார்களின் ஆயுள் வேண்டியும் கன்னிப்பெண்கள் சிறந்த மணவாளனை வேண்டியும் இந்த வரலக்ஷ்மி வழிபாடுகளை  நடைபெற்றன


மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆலயங்களில் இன்று வரலக்ஷ்மி பூசை வழிபாடுகள்  நடைபெற்றன .

அருள்மிகு காமாட்சி அம்பாள்  ஆலயத்தில் நடத்தப்பட்டு வரலக்ஷ்மி பூசை வழிபாட்டில்  அடியார்கள் குத்துவிளக்கு வைத்து வழிபாடுகளை மேற்கொண்டனர்.

 பூஜையினை தொடர்ந்து அடியார்களுக்கு வரலக்ஷ்மி காப்புக்கட்டும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து விசேட பூஜைகள் நடைபெற்று அம்மன்  உள்வீதி வீதியுலா வருதல் நடைபெறவுள்ளது.. இந்த வரலக்ஷ்மி பூசை வழிபாட்டு நிகழ்வில் பெருமளவான அடியார்கள் கலந்துகொண்டு தமது வேண்டுதலை நிவர்த்தி செய்துகொண்டனர்