மாவட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களுடனான ஊடக ஒழுக்க நெறி தொடர்பான கலந்துரையாடல்

(லியோன்)

மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் மாவட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களுடனான ஊடக ஒழுக்க நெறி தொடர்பான கலந்துரையாடல்   மட்டக்களப்பில் நடைபெற்றது


மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் “பெண்கள் வலுப் பெறுவதன் ஊடாக மாற்றங்களை ஏற்படுத்தி அதன் அபிவிருத்தியில் வெளிக்கொண்டு வருவதன் மூலம் பெண்களின் உரிமைகளையும் பொருளாதார வளர்ச்சிகளையும் உரிமை சார் செயல்பாடுகளில் பரிந்துரைகளை மேற்கொள்ளல் “ என்ற தொனிப்பொருளில் ஊடக ஒழுக்க நெறி தொடர்பான ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களுடனான கலந்துரையாடல் இன்று மட்டக்களப்பு அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையம் அலுவலகத்தில் நடைபெற்றது .

நடைபெற்ற கலந்துரையாடலின் போது பால்நிலை அடிப்படையிலான வன்முறைகள் அவற்றை  எவ்வாறு அறிக்கை செய்திகளாக வெளியிடல். வன்முறைகளுக்கு உட்பட்டவர்களை அல்லது இலகுவில் வன்முறைக்கு உட்படக் கூடியவர்களை இலக்கு வைத்த மாற்றங்கள் . பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை கையாள்வதற்கான வளங்கள் , இதன் ஊடாக மாற்றங்கள் உருவாக்கப்பட வேண்டிய மட்டங்கள் கட்டியெழுப்புதல் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டது .

இந்த கலந்துரையாடல் நிகழ்வில் வளவாளராக ஆறுமுகம் சொர்ணலிங்கம் கலந்துகொண்டதுடன்  மற்றும் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள் , மாவட்ட சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர் .