குருக்கள்மடம் ஸ்ரீ கிருஷ்ணன் ஆலயத்தில் வரலக்ஷ்மி பூஜை


மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆலயங்களில் நேற்று வெள்ளிக்கிழமை வரலக்ஷ்மி விரதத்தினை முன்னிட்டு விசேட நிகழ்வுகள் நடைபெற்றன.வரலக்ஷ்மி விரதம் என்பது பதினாறு வகைச் செல்வத்துக்கும் அதிபதியான லட்சுமியின் அருள் வேண்டி சுமங்கலி பெண்கள் மற்றும் கன்னிப் பெண்களால் மேற்கொள்ளப்படுகின்றது.

இந்த விரதத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்றுசிறப்புமிக்க குருக்கள்மடம் ஸ்ரீ கிருஷ்ணன் ஆலயத்தில்  வரலக்ஷ்மி பூஜைகள் சிறப்பாக நடைபெற்றன.