மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயம் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.




கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்பு மிக்க மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயம் இன்று (17) வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
இவ்வாலயத்தில் தொடர்ந்து இருபது நாட்கள் சிறப்புத் திருவிழாக்கள் நடைபெற்று 21ம் நாளான எதிர்வரும்
06.09.2017ம் திகதி புதன்கிழமை தீர்த்தோற்சம் இடம்பெறும்.


மண்டூர் கந்தசுவாமி ஆலயம் மட்டக்களப்பு திருப்படைக் கோயில்களில் ஒன்றாக விளங்கினாலும் ஆகம நெறிசாரா பூசைகள் நிகழும் ஆலயங்களில் கதிர்காமத்தை ஒத்திருப்பதால் சின்னக்கதிர்காமம் என சிறப்பித்துக் கூறப்படும் தலமாகும். இன்று பிற்பகல் பூசை வழிபாடுகளுடன் கொடிக்கம்பம் வெட்டப்பட்டு ஆலயத்திற்கு எடுத்து வரும் நிகழ்வும் இடப்பெற்றமை குறிப்பிடத்தக்கது
இவ் கொடியேற்ற நிகழ்வில்  அதிகளவான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Add caption

Add caption



Add caption