இரு வளாகங்களை தவிர கிழக்கு பல்கலைக்கழகத்தின் அனைத்து பகுதிகளும் மூடப்படுகின்றது

கிழக்கு பல்கலைக்கழத்தில் மறு அறிவித்தல் வரைக்கும் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் கிழக்கு பல்கலைக்கழகத்தின் விடுதிகளில் இருந்து மாணவர்களை வெளியேறுமாறும் வேண்டுகோள்விடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரதி உபவேந்தர் கலாநிதி கே.கருணாகரன் தெரிவித்தார்.

திருகோணமலை வளாகம் ,மட்டக்களப்பு கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகம் தவிர்ந்த தவிர்ந்தமற்றய அனைத்து வளாகங்களும் மூடப்படவுள்ளதாகவும்  நாளை வெள்ளிக்கிழமை பகல் 12.00மணிக்கு முன்பாக அனைத்து மாணவர்களையும் வெளியேறுமாறு பணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்று பல்கலைக்கழக பேரவையின் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பணிப்புரைகள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்று மட்டக்களப்பில் உள்ள பல்கலைக்கழக விடுதியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார்.

கிழக்கு பல்கலைக்கழத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நிர்வாக நிலைமை சீராண பின்னர் பல்கலைக்கழக நடவடிக்கைகள் தொடர்பது தொடர்பில் அறிவிக்கப்படும் எனவும் பிரதி உபவேந்தர் தெரிவித்தார்.