புளியடிமுனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு தின நிகழ்வும் பாடசாலை நுழை வாயில் திறப்பு விழா நிகழ்வும்

 (லியோன்)மட்டக்களப்பு  புளியடிமுனை  அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு தின நிகழ்வும்  பாடசாலை நுழை வாயில் திறப்பு விழா நிகழ்வும்  இன்று  நடைபெற்றதுமட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட  புளியடிமுனை   அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு  தின நிகழ்வும்  பாடசாலை நுழை வாயில் திறப்பு விழா நிகழ்வும் பாடசாலை அதிபர்  ஆ விஜயகுமார்   தலைமையில்  பாடசாலை  பிரதான மண்டபத்தில் (03) இன்று  நடைபெற்றது .


ஆரம்ப நிகழ்வாக மாணவர்களினால் அதிதிகளுக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர் . இதனை தொடர்ந்து பாடசாலை பிரதான நுழை வாயில் திறந்து வைக்கப்பட்டது .


இந்நிகழ்வினை தொடர்ந்து அதிதிகளை பிரதான மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டு  மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமானது .


பாடசாலையின்  வருடாந்த பரிசளிப்பு  தின நிகழ்வில் மாணவர்களின்  கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் பாடசாலை மட்டத்தில் நடத்தப்பட்ட பரீட்சைகளில் சிறந்த புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கு , ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைகளில் சிறந்த புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கும் , மாகாணமட்டத்தில் நடத்தப்பட்ட போட்டிகளில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கும்  ,மாணவர்களை பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் கௌரவித்து பரிசில்களும் ,சான்றிதழ்களும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்   இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக  மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா .ஸ்ரீநேசன்  சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு  வலயக் கல்விப்பணிப்பாளர்கள் கே .பாஸ்கரன் , கோட்டக்கல்விப் பணிப்பாளர் எ .சுகுமாரன் மற்றும் பாடசாலையின் ஓய்வுநிலை அதிபர்கள் ,ஆசிரியர்கள்  பாடசாலை  ஆசிரியர்கள் , மாணவர்கள் , பெற்றோர் , பாடசாலை பழையமாணவர்கள் .பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் உட்பட பலர்  கலந்துகொண்டனர்