ஆதியூர் அம்பிளாந்துறை அருள்மிகு ஶ்ரீசிவமுத்துமாரியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு பெருவிழா-2017

மட்டு வாவிக் கரையோரம் வளம் குன்றா சென் நெல்லும் ,வற்றாத பொய்கையுடன் வனமிகு கண்டல்களும் கத கதப்பாய் காற்று வீச அரச மர நிழலில் அமர்ந்திருந்து அருள் புரியும் ஆதியூர் அம்பிலாந்துறை அருள் மிகு சிவமுத்துமாரி அம்மன் திருச்சடங்கில் 03/07/2017ம் திகதி உலகளந்த மாரி ஊர் சுற்றி கிராம மக்களுக்கு அருள் பாலிக்கும் அற்புத திரு ஊர்வல திருவிழா இடம் பெற இருக்கின்றது.இவ் விழாவில் அனைத்து சக்தி பக்தர்களும் கலந்து அன்னையின் அருள் பெற்றுய்யுமாறு அன்புடன் அழைக்கின்றார்கள்  அம்பிளாந்துறை அருள்மிகு ஶ்ரீசிவமுத்துமாரியம்மன் ஆலய பரிபாலன சபையினர்.