பட்டதாரிகள் நியமன வயதெல்லையை 45ஆய உயர்த்த நடவடிக்கை –கிழக்கு முதலமைச்சர்

கிழக்கு மாகாண பட்டதாரிகளின் நியமன  வயதெல்லையை  45 ஆக உயர்த்துவதற்கு கிழக்கு மாகாண முதமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் ஆளுனருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமுகத் தீர்வுகள் எட்டப்படுவதற்கான சாத்தியங்கள் கிட்டியுள்ளன.

இதனடிப்டையில் நாளைய தினத்திற்குள் இது தொடர்பான ஒரு சாதகமான பதிலை குறித்த பட்டதாரிகளுக்கு வழங்கக் கூடியதாக இருக்கும் என எதிர்ப்பார்ப்பதாக கிழக்கு  மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்,

கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும்  ஆளுனர் ரோஹித பொகொல்லாகம ஆகியோர் நடத்திய  பேச்சுவார்த்தையின் பின்னரே இந்த விடயங்களை கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்,

நாட்டில் நிலவிய போர்க்கால சூழ்நிலைகளின் போது தமது பட்டப்படிப்பை தொடர்வதில் பல்வேறு சிக்கல்களை எதிர் கொண்டமையினால் வடக்கு கிழக்கில் உள்ள பல பட்டதாரிகள் தமது உரிய வயதில் நிறைவு செய்வதில் பட்டப்படிப்பை நிறைவு செய்வதில் சிக்கல்களை எதிர் கொண்டமை போன்ற பல காரணங்களை முதலமைச்சர் இதன் போது சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எடுத்துரைத்திருந்தமை சுட்டக்காட்டத்தக்கது.

கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் அயராத முயற்சியின் பயனாக கிழக்கில் உள்ள 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகளுக்கான தொழில்வாய்ப்புக்களை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன,

இதன் முதற்கட்டமாக 1700 பட்டதாரிகளை உள்வாங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கான நியமனங்களும் விரைவில் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.