வெஸ்ட் என்டன் பல்கலைக்கழகத்தின் சட்டமுதுமானி பட்டத்தை நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா பெற்றுள்ளார்.இலண்டனின் முதற்தர நவீன பல்கலைக்கழகமாக 2018 ஆண்டுக்காக தெரிவு செய்யப்பட்டதும்  மகாராணி விருது உட்பட பல்வேறு விருது வென்றதுமான வெஸ்ட் என்டன் (West) பல்கலைகத்தின் சட்டமுதுமானி பட்டத்தை (LLM in International Commercial Low ) பட்டத்தை மட்டக்களப்பு நீதாவான்  நீதிமன்ற நீதிபதியும்,மேலதிக மாவட்ட நீதிபதியுமாகிய மாணிக்கவாசகர் கணேசராஜா பெற்றுள்ளார்.

ஏற்கனவே அமெரிக்க நோற்றிசிடம் பல்கலைகழகத்தில் புலமைப்பரிசில் வாயிலாக குற்றவியல்,மனித உரிமைகள் துறையில் சட்டமுதுமானி பட்டத்தை பெற்றதுடன் மனித உரிமைகளுக்காகன சர்வதேச விருதுகளையும் நீதிபதி பெற்றுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கவிடயம்.