வம்மியடியூற்றில் மாரிக்கு பெருவிழா.


(பழுகாமம் நிருபர்)
மட்டக்களப்பு படுவான்கரையில் பிரசித்தி பெற்ற 40ம் கிராமம் வம்மியடியூற்று அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் நேற்று இரவு கும்பம் ஏற்றல் வைபவத்துடன் ஆரம்பமானது. இதனை சிறப்பிக்கும் முகமாக திக்கோடை அம்பாரைப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து பக்தர்களால் பாற்குடப்பவனி எடுத்துவரபட்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டதுடன் சங்காபிஷேகமும் நடைபெற்றது. கலாசாரத்தினை பிரதிபலிக்கும் முகமாக மயிலாட்டம், கோலாட்டம், அனுமானாட்டம் மற்றும் மேளவாத்தியங்கள் முழங்க பாற்குடப்பவனி இடம்பெற்றது. 
எதிர்வரும் 05.07.2017 மகரதோரணச்சடங்கும், 08.07.2017இல் பால்வார்த்தல், ஆத்திமரம் வெட்டல், தீக்கட்டை எழுந்தருளப்பண்ணலும் இடம்பெற்று 09.07.2017 அதிகாலை தீமிதித்தலும் இடம்பெறும்.