கட்டு பிள்ளையார் ஆலய எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வு

மட்டக்களப்பு செட்டிபாளையம் மாங்காடு கட்டுபிள்ளையார் ஆலய சம்புரோக்ஷண அஷ்டபந்தன பிரதிஸ்டா மஹா கும்பாபிஷேக கிரிகைகள் 5.7.2017 புதன் கிழமை கர்மாரம்பத்துடன் ஆரம்பமாகி 8.7.2017 அன்று  எண்ணெய்காப்பு சாத்துதலும் 9.7.2017 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை மஹா கும்பாபிஷேகம் இடம் பெறவுள்ளமையும் குறிப்பிடதக்கவிடயம் 


அந்த வகையில் இன்று சனிக்கிழமை  எண்ணெய்காப்பு சாத்துதல் ஆரம்பமாகியது.இதன் போது அடியார்கள் மூல மூர்த்திக்கும் பரிவார தெய்வங்களான பலிபீடம் மூர்சிகம் சிவன்,பார்வதி,நகதம்பிரான்,முருகன்,நவக்கிரகம்,வைரவர்,சண்டேஸ்வரர் ஆகியனவற்றுக்கு எண்ணெய்காப்பு சாத்தினர்.