மட்டக்களப்பில் சிங்கள இளைஞன் ரயில் மோதி பலி

மாகோவில் இருந்து மட்டக்களப்பு நோக்கிவந்த புகையிரத்தில் மோதுண்டு இன்று வியாழக்கிழமை பிற்பகல் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று வியாழக்கிழமை பிற்பகல் மட்டக்களப்பு,திராய்மடு பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் இதன்போது 24 வயது மதிக்க தக்க இளைஞனே உயிரிழந்துள்ளதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் புகையிரதத்தில் மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு வைக்கப்பட்டிருந்ததுடன் இதுதொடர்பான விசாரணையை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டனர்.

குறித்த இளைஞன் சிங்கள இளைஞனாக இருக்கலாம் என தெரிவித்துள்ள பொலிஸார் சிங்களத்தில் கடிதம் ஒன்றை எழுதிவிட்டே புகையிரதத்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இளைஞனின் பை ஒன்றுமட்டுமே மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் தொடர்பான வேறு எந்த அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவனமும் அவரிடம் காணப்படவில்லையெனவும் புகையிரத நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த இளைஞன் தண்டவாளத்தில் தலையினை வைத்தே ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளதாகவும் கடிதத்தில் நான் யாரும் அற்ற அநாதை என்று எழுதிவைத்துள்ளதாகவும் புகையிரத நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

விசாரணைகளின் பின்னர் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.