முறாவோடை சக்தி வித்தியாலயத்திற்கு அருகில் பாலியல் இம்சைகள்!!!



வாழைச்சேனை முறாவோடை தமிழ் கிராமத்திற்கு பின்னாலுள்ள 'செம்மனோடை' காடையர்களினால் முறாவோடை சக்தி வித்தியாலய  மாணவிகளையும் இங்கு வரும் ஆசிரியர்கள், கமநல சேவை உத்தியோகத்தர்கள் போன்ற தமிழ் அரச அலுவலகர்கள் மீது தமது பாலியல் சேட்டைகளை செய்வது அதிகரித்துள்ளது.
இச்சம்பவங்கள் பெரும்பாலும் கறுவாக்கேணி சந்தியை தாண்டி முறாவோடை காளி கோயில் நெருங்கும் முன் இடையிலுள்ள முஸ்லிம்களுக்கு சொந்தமான தோட்டங்களிலும் பற்றைக்காடு மறைவில் ஓரு சில செம்மனோடை, காவத்தமுனை காடையர்கள் போதை வஸ்துகளை பாவித்துக்கொண்டு தமது ஆடைகளை களைந்து தமது மறைவான அங்கங்களை காட்டுதல் சைகை மூலம் எச்சரித்தல் போன்ற அடாவடிகள் மூலம் தமிழ் மாணவர்களையும், அரச அலுவலகர்களை மிரட்டும் சம்பவம் அதிகரித்துள்ளது.

இதனால் இப்பாடசாலைக்கு மாணவிகள் வர பயந்து தயங்குகின்றார்கள்.
அண்மையில் இப்பாடசாலை வரும் வழியில் ஒரு மாணவிகளுக்கு நடைபெற்றுள்ளது.

இதை விட இப்பாடசாலை அதிபர்  இப்பாடசாலை பரிசளிப்பு விழாவில்  தெரிவித்தது தற்போது மீண்டும் நடைபெற்றுள்ளது.அதிபர் கடந்த வருடம்(05.10.2016)  பகிரங்கமாக கூறிய விடயம் கீழே உள்ளது இது ஒரு அதிபரின் பேச்சு..!

"கடந்த யுத்த காலத்தில் இருந்து முறாவேடை சக்தி வித்தியாலயமும் அதனைச் சூழவுள்ள கிராமமும் பல்வேறுபட்ட பிரச்சினைக்கு முகம்கொடுத்து வந்த நிலையில், இப்பொழுது தலை தூக்கியிருக்கும் எல்லைக் கிராமங்களிலுள்ள கபாலிகளினால் தமிழ் இளம் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் தொல்லை மிகவும் வேதனையளிக்கின்றது என பாடசாலையின் அதிபர் சா.சுதாகரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்திற்கு உட்ட முறாவேடை சக்தி வித்தியாலத்தின் 125ஆவது ஆண்டு நிறைவு விழாவில் தனது விசேட தலைமை உரையின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் இங்கு தொடந்து கருத்துத் தெரிவிக்கையில்,

இக்கிராமத்திலுள்ள முதியோர்கள் மற்றும் மூத்தோர்களினால் தெரிவிக்கப்பட்டதாவது, இக் கிராமம் சுமார் 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் உருவாக்கம் பெற்ற ஒரு பழம்பெரும் கிராமம் என அறிதல் கிடைக்கின்றது.

அந்த வகையில் இன்று இக்கிராமத்தை சகோதர இனத்தவர்கள் கபளிகரம் செய்யும் நடவடிக்கை அதிகளவில் இடம்பெற்று வருகின்றது, இதனை அரசியல் வாதிகள் நிர்வாக உத்தியோகத்தர்கள் பாராமுகம் பாராமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய தார்மிகப் பொறுப்பு எம் தமிழ் பேசும் தலைமைகளுக்கு இருக்கு, அதனை செய்துதர வேண்டும்.

இன்றைய கால கட்டத்தில் எங்களுடைய சிறு மாணவச் செல்வங்களுக்கு எல்லைக் கிராமங்களில் இருக்கும் கபாலிகளினால் பல்வேறுபட்ட தொல்லைகள் இடம்பெறுகின்றது.
எமது அரசியல்வாதிகள் பிட்டும் தேங்காய்ப் பூவும் போல் இருக்கின்றோம் என பேசிக்கொண்டு திரிவதில் எமது தமிழ் சமூகத்திற்கு ஒன்றும் நடைபெறுவதில்லை. இதனால் எங்கள் மாணவச் செல்வங்களும் இந்த முறாவேடை மக்களும் தான் பரிதவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
அரசியல் வாதிகளாகிய நீங்கள் எவ்வளவு தான் வேதாந்தங்களைப் பேசிக் கொண்டிருந்தாலும், இரவு சுமார் 12 மணிக்கு அப்பால் தமிழ் பிரதேசங்களுக்குள் அத்துமீறி வந்து காணிகளைப் பிடிக்கும் கூட்டம் ஒருபுறம், காணியைப் பிடித்த பிற்பாடு அதனை அகற்றி அது என்னுடைய காணி என உரிமை கூறுவது இன்னொருபுறம்.

எமது பாடசாலையில் காலை சுமார் 7 மணிக்கு மணியடித்ததும் காலைக் கூட்டத்தை ஆரம்பித்தால் பாடசாலையின் எல்லையில் நின்று கொண்டு கீழாடையை உயர்த்திக் காட்டும் கூட்டம் ஒருபுறம்.

இன்னொரு புறத்திலே இந்த பாடசாலை 5ஆம் தரத்தில் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் கறுவாக்கேணியான தாய்ப் பாடசாலையை நோக்கிச் செல்லுக்கின்ற வீதியிலே எங்களுடை மாணவர்களாகிய சின்னச் சிறார்களை கையிலே பிடித்து பற்றைக்குள் இழுத்துச் செல்லும் ஒரு கபாலிக் கூட்டம் ஒருபுறம்.

ஏன் மாலைநேர பிரத்தியேக வகுப்புக்களை நடாத்திக் கொண்டிருக்கும் சமயத்திலே ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் அதே நிலையை காட்டும் கபாலிக் கூட்டம் ஒருபுறம்.

எங்கள் காளி கோயிலிலே வெள்ளிக் கிழமை வேளை பூசாரியாரோ அல்லது பக்தர்களோ சென்றால் அங்கு வெட்டப்பட்ட மாட்டு இறைச்சி, எழும்பு, தோலுமாக கிடக்கும் ஒருபுறம் இவ்வாறான அவல நிலை ஏன் இந்த கிராமத்துக்கு என்று நான் கேட்கின்றேன். எனது தமிழ் மக்களின் அவலை நிலை மாறாவேண்டுமென நான் இத்தனை விடயங்களையும் முன்வைக்கின்றேன்.

குறித்த கபாலித்தனத்தையும் கபாலிக் கூட்டத்தையும் யாவருக்கும் தெரிந்தது, யார் செய்கின்றார்கள் என்பதும் தெரிந்தது. குறித்த விடயங்களுக்கு தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆகவே தான் இங்கு வந்திருக்கும் பெரியோர்கள், அரசியல்வாதிகள் மற்றும் இரு சமூகங்களின் அரசியல் தலைகைள் அனைவரும் சேர்ந்து குறித்த விடயத்திற்கு ஒரு நிரந்தர தீர்வைப் பெற்றுத் தரவேண்டும்.

இதனால் அப்பாவி தமிழ் மக்கள் முட்டிமோதிக் கொண்டிருக்கின்றார்கள், ஆனால் மேலானவர்கள் மேலிடத்தில் இருந்து கொண்டிருக்கின்றார்கள் என தெரிவித்துள்ளார்."

அண்மையில் மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமணரெத்தின தேரர் இப் பாடசாலை மைதான அபகரிப்புக்கு எதிராக தமிழ் மக்களின் ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

எனவே இதற்கான சட்டரீதியான நடவடிக்கையை மேற்கொள்வது கல்வி உயரதிகாரிகள் மற்றும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சரின் பாரிய பொறுப்பாகும் என பிரதேசமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.