மட்டக்களப்பு மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லம் சிரமதானம் செய்யப்பட்டது

மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குப்பட்ட மாவடிமும்மாரி மாவீரர் துயிலும் இல்லம் சிரமதானப் பணி இன்று (5) புதன்கிழமை இடம்பெற்றது.

விடுதலைப் புலிகள் காலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு மரணித்த உடலங்கை குறித்த இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டு பூனித பூமியாக குறித்த இடம் இருந்து வந்த நிலையில்யுத்தம் முடிவந்த பின்னர் குறித்த மாவீரர் துயிலும் இல்லம் அமைந்துள்ள பகுதி பாதுகாப்பு படையினரால் அழிக்கப்பட்ட நிலையில் உள்ளது.

குறித்த இடம் அடர்ந்த காடுகள் நிறைந்திருந்தமையினால் எதிர் காலத்தில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூரும் முகமாக இன்றைய தினம் குறித்த இடம் துப்பரவு செய்யப்பட்டது.

மாவடிமும்மாரி, பனிச்சையடிமும்மாரி, கொக்கட்டிச்சோலை, முனைக்காடு, காரைதீவு போன்ற பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள், ஜனநாயக போராளிகள் கட்சி உறுப்பினர்கள் என பலர் சிரமதானத்திற்கு வருகைதந்து குறித்த இடத்தை துப்பரவு செய்யம் பணியில் ஈடுபட்டனர்.

மாவீரர் துயிலும் இல்லப் பிரதேசம் துப்பரவு செய்யப்பட்ட பின்னர் குறித்த இடத்தில் பொது மக்களினால் ஒழுங்கு படுத்தப்பட்டு உயிர் நீர்த்த உறவுகளுக்கு பொதுச் சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் இடம்பெற்றது.