தமிழ்த் தேசிய மாணவர்பேரவையின் ஏற்பாட்டில் கல்விக் கருத்தரங்கு.தமிழ்த் தேசிய மாணவர்பேரவையின் ஏற்பாட்டில் கடந்த 03/07/2017 வவுனியா வடக்கு கல்வி வலயத்தில்  இவ்வருடம் க.பொ.த. உயர் தரத்தில் பரீட்சை தோற்றவுள்ள மாணவர்களுக்கான தமிழ் பாட பரீட்சை வழிகாட்டி கருத்தரங்கு வ/ஓமந்தை மத்திய கல்லூரியில் பேரவையின் வவுனியா வடக்கு அமைப்பாளர் B.பவிதன்  தலைமையில் நடைபெற்றது. கருத்தரங்கில் வவுனியா வடக்கு கல்வி வாலயத்திற்குட்பட்ட நெடுங்கேணி,புளியங்குளம்,கனகராயன்குளம்,உட்பட்ட பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிகழ்வில்
சிறப்புரை ஆற்றிய பேரவையின் பொதுச்செயலாளர் யோன்சன் தமிழ் சமுதாயத்தின் மிகப்பெரிய ஆயுதம் கல்வியே கல்வியிற் சிறந்த பல்கலை வல்லுனர்களாகி பூவுலகை ஆட்சி புரிவதே எமது மாணவர்களின் தூர நோக்கான கடமையாகுமென எமது மாணவர்களின் தற்போதைய தேவை தொடர்பாக உரை ஆற்றியதுடன் மாணவர்களுக்கு வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டது.