கிழக்குமாகாண ஆளுநர் மெதடிஸ்த மத்திய கல்லூரிக்கு விஜயம்

(லியோன்)

கிழக்குமாகாண ஆளுநர்  மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரிக்கு இன்று விஜயம் ஒன்றை மேற்கொண்டார் .

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி அதிபர் மற்றும் கல்லூரி பழைய மாணவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க  கிழக்குமாகாண புதிய ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம இன்று மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரிக்கு விஜயத்தை மேற்கொண்டார் .
கிழக்குமாகாணத்திற்கு புதிய ஆளுநராக பதவியேற்றுள்ள ரோஹித்த போகொல்லாகமவை அவரது அலுவலகத்தில்  சந்தித்து தமது கல்லூரியில் நிலவுகின்ற  நிர்வாக கட்டமைப்புக்களின் குறைபாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதற்கு இணங்க இன்று இந்த விஜயத்தை மேற்கொண்டார் .

கல்லூரிக்கு வருகை தந்த ஆளுனரை கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களினால் வரவேற்கப்பட்டனர் .
இதனை தொடர்ந்து அதிபரின் அலுவலகத்தில் கலந்துரையாடல்கள் நடைபெற்றன ,

இந்த கலந்துரையாடலின் போது கல்லூரியில் நிலவுகின்ற ஆசிரியர்கள் பற்றாக்குறைகள்  . பாடசாலை வளங்களின் குறைபாடுகள் , மாகாண பாடசாலையாக இயங்கி வரும் கல்லூரியை தரம் உயர்த்துவது போன்ற பல்வேறு  விடயங்கள் கலந்துரையாடப்பட்டன .


இதன் போது முன்வைக்கப்பட்ட விடயங்கள் கேட்டறிந்துகொண்ட ஆளுநர் இதனை தமது நிர்வாக கவணத்திற்கு கொண்டு இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக  தெரிவித்தார்